மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் பேட்டி துணை முதல்வர், அமைச்சர்கள் மீது முதல்வருக்கு நம்பிக்கையில்லை

தஞ்சை

துணை முதல்வர், சக அமைச்சர்கள் மீது முதல்வருக்கு நம்பிக்கையில்லையென பாலகிருஷ்ணன் கூறினார்.தஞ்சையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டி: வெளிநாட்டுக்கு முதல்வர் செல்லும்போது அவரது பணிகளை வேறு அமைச்சரிடம் ஒப்படைப்பது வழக்கம். ஆனால் யார் மீதும் நம்பிக்கை இல்லாததால் அவர் பொறுப்புகளை ஒப்படைக்கவில்லையா என்ற சந்தேகம் எழுகிறது.

துணை முதல்வர், அமைச்சர்கள் மீது நம்பகத்தன்மை இல்லையா என்று கேள்வி எழுகிறது. வெளிநாட்டுக்கு சென்று வந்தபிறகு ஆட்சி அதிகாரம் கைவிட்டு போய் விடுமோ என்ற பயமா என்பது தெரியவில்லை.

வெளிநாட்டு மூலதனத்தை  தமிழகத்துக்கு கொண்டு வருவதற்காக முதல்வர் எடப்பாடி பழனிசாமி செல்கிறார். வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு மூடுவிழா நோக்கி செல்லும்போது எப்படி வெளிநாட்டு மூலதனத்தை இங்கு கொண்டுவர போகிறார் என தெரியவில்லை.  உள்நாட்டு தொழில்களை பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.ஜம்மு காஷ்மீரில் அமைதி திரும்பி விட்டது என்கிறார்கள். ஆனால் அங்கு செல்ல தலைவர்களை அனுமதிக்க மறுக்கின்றனர்.  இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here