ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி குற்றம் தடுப்புக் கழக மாணவர்களின் தனித்துவ நடவடிக்கைகள்.

ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி

பள்ளி மாணவர்கள் மத்தியில் கட்டொழுங்கு நன்நெறி பண்புகளை மேலோங்கச் செய்யும் வகையில் தடுப்பு கழகம் அமைக்கப்பட்டு அதன் வாயிலாக பல்வேறு நடவடிக்கைகளை பள்ளி அளவில் செய்து வரும் குற்றம் தடுப்புக் கழக மாணவர்களின் தனித்துவ நடவடிக்கைகள் தம்மை பெரிதும் மிகைப்படுத்தி உள்ளது என்று ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியை பி. உமா தெரிவித்தார்.

குற்றம் தடுப்புக் கழக மாணவர்களின் துரித நடவடிக்கைளில் ஒன்றாக பெரியவர்களை மதிக்கும் அவர்களை முறையாக பாதுகாப்பு அணுகுமுறையாக செமினி கம்போங் சீரேயில் அமைந்துள்ள இன்சான் இஸ்திமேவா சகாய சிலாங்கூர் குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பராமரிப்பு இல்லத்தில் சிறியவர் முதல் பெரியவர்கள் 35 பேர்களுக்கு
பள்ளி மாணவர்களுடன் தலைமை ஆசிரியர் உட்பட துணை தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்று மதிய உணவும் அன்பு பரிசும் வழங்கி சிறப்பித்தனர்.

இதுபோன்ற சிறப்பு நடவடிக்கையால்எதிர்காலத்தில் பெரியவர்களை மதிக்கும் சமுதாயமாக மாணவர்கள் திகழ வேண்டும் என்பதற்கு சான்றாக இது போன்ற நிகழ்வுகளை நடத்துவது தனித்துவக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து, இங்குள்ள குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பராமரிப்பு இல்லத்தின் தோற்றனர் டத்தோ டாக்டர் குமார் எஸ். பரமசிவம் அதன் இயக்குனர் டாக்டர் நிஷா குமார் தங்களது மனமார்ந்த நன்றிகளை ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களுக்கு அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here