மேஜர் ஸாஹிர் – இராணுவ மரியாதையுடன் நல்லடக்கம்

ஈப்போ

கோத்தா கினபாலு, லோக்காவி இராணுவத் தளத்தின் கண்காட்சிப் பயிற்சியின்போது சூடுபட்டு மரணமடைந்த மேஜர் முகமட் ஸாஹிர் அர்மயாவின் நல்லுடல் தம்புன் இஸ்லாமிய மையத்துக் கொல்லையில் இன்று நல்லடக்கம் செய்யப்பட்டது.

பிரபல கலைஞரான ஏ.ஆர். படோலின் புதல்வரான முகமட் ஸாஹிரின் உடல் உலு கிந்தா தாமான் பெர்பாடுவானின் உள்ள வீட்டில் இருந்து 7.45 மணிக்குக் கொண்டுவரப்பட்டது.

ஆயுதப் படைகளின் கொடி சுற்றப்பட்ட சவப்பெட்டியை இராணுவ வீரர்கள் துக்கிக் கொண்டு வந்தனர்.

பொதுமக்கள், குடும்பத்தினர், உறவினர்கள், இராணூவத்தினருமாக 1000க்கும் அதிகமானோர் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டனர்.

ஸாஹிரின் மனைவியான 31 வயது நவுர் ஷாஃபினார் ஹருண், சவக்குழில் நீரை ஊற்றும்போது கண்ணீர் மல்க அழுதது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது.

அஞ்சலிக்குப் பின்னர், சவப் பெட்டியில் போர்த்தியிருந்த இராணுவக் கொடியை கர்னல் சுல்கினைன் முகமட் யூனோஸ், நவுர் ஷாஃபினார் ஹருணிடம் ஒப்படைத்தார்.

இறுதி மரியாதையில் 11ஆவது ரெஜிமென்டின் அதிகாரி கர்னல் சுல்கினைன் முகமட் யூனோஸ், மேஜர் ஜெனரல் ஹசான் அலி மற்றும் 2ஆவது பிரிகேடின் தலைவர பிரிகேடியர் ஜெனரல் மாலிக் ரசாக் சுலைமான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here