பெட்டாலிங் ஜெயா
இந்தோனேசியாவில் நடந்த பந்து விளையாட்டில் கலவரம் நடக்கவில்லை என்றும் அதில் வெறும் நீர் அடிக்கப் பட்டதாகக் கூறப்படுவதை சைட் சாடிக் சாடியுள்ளார்.
அந்த நிகழ்ச்சியில் நீர் அடிக்கப்பட்டதாக இருப்பின், விளையாட்டு இடையே நிறுத்தப்பட்டு நிலைமை சீரான பின்னர், தொடர்ந்தது ஏன்? அதில் கண்ணீர் புகையைட் தெளிக்க வேண்டிய அவசியம் என்ன? நாங்கள் ஏன் இரண்டு மணி நேரம் வெளியே விடப்படாமல் கட்டுப்பாட்டு இடத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது ஏன்? என் கண் முன்னெதிரே இரும்புப் பொருள்கள் மலேசிய ரசிகர்களை நோக்கி வீசப்பட்டது ஏன் என அவர் காட்டமாக வினவினார்.
அந்த விளையாட்டு அரங்கில் கலவரம் ஏதும் நடக்கவில்லை என இந்தோனேசியா மெட்ரோ ஜெயா போலீஸ் மக்கள் தொடர்பு ஆணையர் ஆர்கோ யுவோனோ மறுத்துள்ளதை சைட் சாடிக் சுட்டிக்காட்டினார்.
செப்டம்பர் 5, வியாழக்கிழமை ஜகார்த்தாவின் கெளோரா புங் கர்னோ அரங்கத்தில் உலகக் கிண்ண தேர்வு ஆட்டத்தின்போது மலேசியா இந்தோனேசியாவை 3-2 எனும் கோல் கணக்கில் தோற்கடித்தது.
அந்த வெற்றியைத் தடுக்கும் விதத்தில், இந்தோனேசிய ரசிகர்கள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னரும், நடந்தபோதும் அதன் பின்னர் கலவவரத்தில் ஈடுபட்டு இரும்புத் துண்டுகள், நீர் போத்தல்கள், இருக்கைகளை வீசி எறிந்ததோடு மைதானத்திலும் இறங்கி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், மலேசிய ரசிகர் ஒருவரும் காயத்துக்கு ஆளானார்.
இதனிடையே, இந்தோனேசிய இளைஞர் விளையாட்டு அமைச்சர் இமாம் நஹ்ராவி சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.