நாட்டின் பொருளாதார நிலை மந்தமாகவும், கவலைக்குரியதாகவும் உள்ளது. யாரும தொழில் தொடங்க முன்வராத நிலையில், இன்றைக்கு அந்நிய முதலீட்டை திரட்ட போகிறோம் என்று தமிழக முதல்வர் எடப்பாடி மற்றும் பல அமைச்சர்கள் வெளிநாடு சென்றுள்ளனர். 8 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் 2 முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தியுள்ளனர். இந்த மாநாட்டில் 5.42 லட்சம் கோடி முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆனால், 2 மாநாட்டில் ஒப்பந்தம் போட்ட நிறுவனங்கள் மூலம் எத்தனை தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டது என்று தெளிவுபடுத்த முடியுமா? காஞ்சிபுரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் கார் தொழிற்சாலைகள் தொடங்கப்பட்டது. கலைஞரின் இந்த முழு முயற்சியால் தான் ஆசியாவின் டெட்ராய்டு என்று சென்னை அழைக்கப்பட்டது. ஆனால், தற்போதையில் இருக்கும் ஆட்சியில் மக்களிடம் வாங்கும் சக்தி இல்லை. உற்பத்தி செய்கிற கார் விற்க முடியாத நிலையில் உள்ளது. உதிரிபாகங்கள் தயாரிக்கும் சிறு,குறு தொழிற்சாலைகள் 500க்கும் மேற்பட்டவை மூடப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், யாரும் முதலீட்டை தமிழகத்தில் போட தயாராக இல்லை. ஆனால், இன்று மக்களை ஏமாற்றுவதற்காக அந்நிய முதலீட்டை கொண்டு வரப்போவதாக கூறி முதல்வர், அமைச்சர்கள் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள், வெளிநாட்டிற்கு போய் ஒரு கம்பெனி கூட கொண்டு வரப்போவதில்லை. அதுவும் இவர்களை நம்பி யாரும் வரப்போவதில்லை. நாட்டு மக்களை ஏமாற்றும் செயலில் இவர்கள் ஈடுபடுகின்றனர்.
தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தவில்லை. குப்பை எடுக்க கூட எல்லா ஊர்களிலும் ஆள் இல்லை. அதற்கான வாகனங்கள் பற்றாக்குறையாக உள்ளது. பல ஊர்களில் மின்கட்டணம் கட்ட முடியாமல் உள்ளாட்சித்துறை தவிக்கிறது. தண்ணீர் தட்டுபாடு, விலைவாசி உயர்வில் கவனம் செலுத்தாமல் வெளிநாடுகளில் முதல்வர், அமைச்சர்கள் சுற்றுப்பயணம் செய்துள்ளனர்.லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனை நலிந்து போய்விட்டதாக கூறுகின்றனர். அப்படிப்பட்ட மருத்துவமனையை தமிழகத்திற்கு கொண்டு வரப்போவதாக கூறுவது ஏமாற்றுவேலை. ஏதோ காரணத்தை கூறிக்கொண்டு ஒவ்வொரு துறை அமைச்சர்கள் பல நாடுகளுக்கு சென்றுள்ளனர். அவரவர் அந்தெந்த துறையை வளப்படுத்தப்போவதாக கூறுகின்றனர். கல்வித்தரத்தை உயர்த்துவதற்காக போகிறேன். பால்வளத்தை பெருக்க போகிறேன். சுகாதாரத்தை மேம்படுத்த போகிறேன் என்று ஒவ்வொரு அமைச்சர்கள் சொல்கின்றனர். ஆனால், அவர்கள் சொல்வது போன்று எதுவும் நடக்க போவதில்ைல. அவர்கள் ஆட்சி முடிய போகிறது. அவர்களுக்கு மக்களின் நலனில் அக்கறை இல்லை. ஆனால் அப்படி காட்டிக்கொள்கின்றனர்.
முதலீட்டாளர் மாநாடு 2 முறை நடந்தது. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கூட இது தொடர்பாக வெள்ளை அறிக்கை கேட்டார். ஆனால், அவர்கள் ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் வந்து இருப்பதாக பொய் கூறி வருகின்றனர். யாரும் எதை பற்றியும் கவலைப்படவில்லை. 110 விதிகளில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் எதுவும் நடைபெறவில்லை. அது ேபான்று தான் இது. எனது தொகுதிகளில் கூட ₹85 கோடி பாலம் அமைக்கப்படும் என்றனர். தற்போது வரை ஆய்வு பணி கூட நடக்கவில்லை. சென்னை புறநகர் பகுதிகளில் பல்வேறு அடிப்படை பிரச்சனைகள் உள்ளது. இது குறித்து கேட்டால், ஜெயலலிதா ஆட்சி சிறப்பாக உள்ளது என்று சட்டசபையில் கூறுகின்றனரே தவிர நாங்கள் கூறும் புகார்களை அவர்கள் செவி கொடுத்து கேட்டதாக தெரியவில்ைல. யாரும் முதலீட்டை தமிழகத்தில் போட தயாராக இல்லை. ஆனால், இன்று மக்களை ஏமாற்றுவதற்காக அந்நிய முதலீட்டை கொண்டு வரப்போவதாக கூறி முதல்வர், அமைச்சர்கள் சுற்றுலா சென்றுள்ளனர். இவர்கள், வெளிநாட்டிற்கு போய் ஒரு கம்பெனி கூட கொண்டு வரப்போவதில்லை.