கோலாலம்பூர்
பகாங், ரொம்பினில் காற்றின் தூய்மைக் கேடு அபாய கட்டத்தை எட்டியுள்ள வேளையில் தீபகற்ப மலேசியாவிலும் சரவாக்கிலும் அது கடுமை அடைந்து வருகிறது.
ரொம்பினில் காற்றின் தூய்மைக் கேட்டின் குறியீடு 228ஐ எட்டியதாக எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
நீலாயில் குறியீடு 157ஐ எட்டியுள்ளது, மேலும் கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள சிலாங்கூர், கோலாலம்பூர் பகுதிகளில் நிலமை கடுமை அடைந்து வருகிறது.
புத்ரா ஜெயாவில் காற்றின் தூய்மைக் கேட்டுக் குறியீடு 151ஆகவும் செராசில் 142, ஷா ஆலமில் 135 மற்றும் பெட்டாலிங் ஜெயாவில் 134ஆகவும் நிலை கொண்டிருக்கின்றன.
சரவாக்கில் அது அபாய கட்டத்தை எட்டியிருப்பதால், அங்குள்ள 409 பள்ளிகள் மூடப்பட்ட வேளையில் யுபிஎஸ் ஆர் தேர்வுகள் தொடர்ந்து நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தோனேசிய காடுகளை அழிப்பதன் மூலம் கடுமையான புகை மூட்டம் ஏற்படுவதாகக் கூறப்பட்டாலும், அதனை அந்த நாடு மறுத்து வருவது குறிப்பிடத்தக்கது.