அலிபாபா- பதவி விலகினார் ஜேக்-மா

ஹாங்காங்-பிரபல இணையதளம் விற்பனை நிறுவனமான அலிபாபாவின் நிறுவனரும் அதன் தலைவருமான ஜேக்-மா தன் தலைவர் பொறுப்பிலிருந்து விலகினார். துடிப்புமிக்க ஒரு ஆற்றலுடன் ஜேக்- மா நிர்வாகத்தை மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் ஆங்கில பாட ஆசிரியராக இருந்த ஜேக்–மா தனது 55ஆவது பிறந்தநாளன்று தன்னுடைய பதவி விலகலை அறிவித்திருப்பது அனைவருக்கும் வியப்பும் அதிர்ச்சியும் கொடுத்துள்ளது.

மின்னியல் முறையில் வர்த்தகத்தில் ஒரு சிறந்த ஆளுமையாக ஜேக்-மா திகழ்ந்தார் என்பது குற்றிப்பிடதக்கது. இ-பே மற்றும் அமேசோன் போன்ற வர்த்தக நிறுவனங்களையும் புறந்தள்ளி தனது நிறுவனத்தை முன்னெடுத்து கொண்டு வந்தவர் ஜேக்-மா ஆவார். 2016ஆம் ஆண்டு ஜேக்-மா ஆசியாவின் கோடிஸ்வரராக திகழ்ந்தார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here