போலி செய்திகளை பரப்பும் டிவிட்டர் கணக்குகள் மூடல்

வாஷிங்டன் – சீனா, அரபு நாடுகள் உட்பட உலகம் முழுவதும் போலி ெசய்திகளை பரப்பும் ஆயிரக்கணக்கான டிவிட்டர் கணக்குகள் மூடப்பட்டன. டிவிட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் மூலம் தற்போது ஏராளமான பொய் செய்திகளும்,  புரளிகளும் பரப்பப்பட்டு வருகின்றன. இதனால், ஏராளமானோர் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலையில், அமெரிக்காவை தலைமை இடமாக ெகாண்டு இயங்கும் டிவிட்டர் நிறுவனம், போலி செய்திகளை பரப்பும் ஆயிரக்கணக்கான டிவிட்டர் கணக்குகளை மூடிவிட்டதாக தெரிவித்துள்ளது. இது தொடர்பாக டிவிட்டர் நிறுவனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ‘அரசு சார்பான பிரச்சார செய்திகளை சில நாடுகளில் உள்ள டிவிட்டர் கணக்குகள் மூலம் சிலர் பரப்பி வருகின்றனர்.

இவ்வாறு போலி ெசய்திகள் அதிகம் பரப்பும் நாடுகளான ஐக்கிய அரபு நாடுகள், சீனா, ஸ்பெயின் நாடுகளில் உள்ள டிவிட்டர் கணக்குகளை மூடியுள்ளோம். இது தவிர, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளில் போராட்டக்காரர்கள் இடையே சர்ச்சையை உருவாக்கும் விதமான ெசய்திகளை பரப்பும் கணக்குகளும், சவுதி அரபு நாடுகள் சார்ந்த செய்திகளை எகிப்து மற்றும் ஐக்கிய அரபு நாடுகளில் இருந்து பரப்பும் டிவிட்டர் கணக்குகளும், ஸ்பெயின் மற்றும் ஈகுவடார் நாடுகளில் இருந்து போலி செய்திகளை பரப்பும் டிவிட்டர் கணக்குகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன,’ என கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here