சீனாவில் ஊழல் வழக்கில் சிக்கிய 2 முன்னாள் மந்திரிகளுக்கு மரண தண்டனை

பீஜிங், சீனாவின் முன்னாள் பாதுகாப்புத்துறை மந்திரி வெய் பெங்ஹே. இவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2023-ம் ஆண்டு வரை அந்த பதவியில் இருந்தார். இவரை தொடர்ந்து, லி ஷாங்பு பாதுகாப்புத்துறை மந்திரியாக பதவியேற்றார்.

இதனிடையே, இவர்கள் இருவர் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், சீனாவின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்து இருவரையும் நீக்கம் செய்து சீன அதிபர் ஜின்பிங் அதிரடியாக உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து, வெய் பெங்ஹே மற்றும் லி ஷாங்பு மீதான ஊழல் புகார்கள் குறித்து கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த விசாரணையில் இருவர் மீதான குற்றச்சாட்டுகளும் உறுதி செய்யப்பட்ட நிலையில், இரண்டு முன்னாள் மந்திரிகளுக்கும் மரண தண்டனை விதித்து சீன கோர்ட்டு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here