மார்கழி மாதத்தில் அதிகாலைக்கு பிறகு தூங்கக்கூடாது. விடிவதற்குள் கண்டிப்பாக குளிக்க வேண்டிய மாதம் மார்கழி மாதம். ஏன் என்றால் அந்த நேரத்தில் இயற்கையில் இருந்து நமக்கு கிடைக்கக்கூடிய ஆக்சிஜன் சக்தி இந்த உடலுக்கு அந்த ஆண்டு முழுவதும் நலனை தருகிறது. அதனால் தான் மார்கழி மாதத்தில் கட்டாயம் அதிகாலை எழுந்து குளிக்க வேண்டும்.
மார்கழி மாதத்தில் பொதுவாக விதை விதைக்கக் கூடாது என்று சொல்வார்கள். ஏனென்றால் இது விதை வளர்வதற்கான காலம் அல்ல. அதனால் தான் மார்கழி மாதம் விதை விதைத்தால் அந்த விதை சரியான உயிர் தன்மை பெற்று வளராமல் போய்விடும் என்பதாலேயே விதைப்பது இல்லை. ஆடி மாதம் போல, மார்கழி மாதம் இறைவனுக்குரிய மாதம்.
இறைவனை வணங்க வேண்டிய மிக அற்புத மாதம் என்பதால் தான் இந்த மாதத்தில் திருமணம் செய்யப்படுவதில்லை. அடுத்து, மார்கழி மாதத்தில் இரவில் கோலம் போடக்கூடாது. பெண்கள் எல்லோரும் இதைக் கவனத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். கோலம் என்பது அழகுக்காக மட்டும் இடக்கூடிய விஷயம் அல்ல. அது தர்மத்திற்காக இடக்கூடியது.