சிறந்த அறிவைப் பெற சிவ வழிபாடு

சிறந்த அறிவைப் பெற வழிபாடு படிக்கின்ற பிள்ளைகளாக இருந்தாலும் சரி பெரியவர்களாக இருந்தாலும் சரி அவர்களால் ஒரு செயலை சிறப்பாக செய்ய இயலவில்லை என்னும் பட்சத்தில் அவர்களுக்குரிய அறிவுத்திறன் என்பது குறைவாக இருக்கிறது என்றேதான் பொருள் படும். அப்படிப்பட்ட அறிவுத்திறனை சிறப்பான முறையில் மாற்றுவதற்கு  சிவபெருமான் அருள் புரிகிறார். சிவ பெருமானை யார் ஒருவர் தொடர்ச்சியாக வழிபாடு செய்கிறார்களோ அவர்களுடைய வாழ்க்கையில் பலவிதமான மாற்றங்கள் உண்டாகும் என்றாலும் இந்த முறையில் வழிபாடு செய்ய சிறந்த அறிவைப் பெற முடியும் என்று கூறப்படுகிறது.
இந்த வழிபாட்டை அனு தினமும் செய்ய வேண்டும். இந்த வழிபாட்டிற்கு நமக்கு தேவைப்படக்கூடிய ஒன்றாக திகழ்வதுதான் சிவாம்சம் பொருந்திய ருத்ராட்சம். ருத்ராட்சம் இத்தனை எண்ணிக்கையில் தான் இருக்க வேண்டும் என்று இல்லை. வரிசையாக ருத்ராட்சத்தை கோர்த்து அதை சிவலிங்கமாக நாம் தயார் செய்ய வேண்டும். அவ்வாறு தயார் செய்த ருத்ராட்ச சிவலிங்கத்தை நம்முடைய வீட்டு பூஜை அறையில் வைத்து யாருக்கு சிறப்பான கல்வி அறிவு வேண்டுமோ? யார் சிறந்த முறையில் படிக்க வேண்டுமோ? அவர்கள் தங்கள் கைப்பட தினமும் சந்தனம் குங்குமம் வைத்து நெய் தீபம் ஏற்றி “ஓம் ருத்ராய நமஹ” என்னும் மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும். பிறகு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.
இப்படி தினமும் சிவலிங்க வடிவில் இருக்கக்கூடிய ருத்ராட்சத்திற்கு வழிபாடு செய்யும் பொழுது சிவபெருமானின் பரிபூரண அருளால் சிறப்பான அறிவை பெற முடியும். ஒரு ருத்ராட்சம் இருந்தாலேயே திலிருந்து நேர்மறை ஆற்றல்கள் அதிகரிக்கும், மனதை ஒருநிலைப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட ருத்ராட்சத்தை பயன்படுத்தி சிவலிங்கமாக தயார் செய்து வழிபடுவதன் மூலம் அந்த சிவலிங்கம் இருக்கக்கூடிய இடமே நேர்மறையான ஆற்றல்கள் நிறைந்த இடமாக மாறும். மேலும் இந்த ருத்ராட்சத்தை தங்களுடைய இறுதி நாள் வரை தொடர்ச்சியாக வழிபாடு செய்யும்பொழுது கடைசிவரை சிவபெருமானின் அருளை அவர்களால் பெற முடியும். முடிந்த அளவிற்கு ருத்ராட்சத்தை கோர்க்கும் பொழுது ஒற்றைப்படை எண்ணிக்கையில் கோர்த்து பிறகு சிவலிங்கமாக தயார் செய்வது மிகுந்த பலனைத் தரும்.
சிவ ஸ்வரூபமாக திகழக்கூடிய ருத்ராட்சத்தை பயன்படுத்தி இந்த முறையில் சிவபெருமானை வழிபாடு செய்ய சிறப்பான அறிவைப் பெற முடியும் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here