குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ள முன்னாள் ராணுவத் தளபதி!

கொழும்பு –

முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் மஹேஷ் சேனா நாயக்க தனது குடும்பத்துடன் துபாய் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரியவருகிறது. துபாய் நாட்டில் உள்ள அமெரிக்க நிறுவனம் ஒன்றில் அவர் முன்னர் மேற்கொண்டு வந்த தொழில் அவருக்கு மீண்டும் கிடைத்துள்ளதாக துபாய் தகவல்கள் தெரிவிக்கின்றதாக சிங்கள ஊடக மொன்று சுட்டிக்காட்டியுள்ளது.

மஹேஷ் சேனாநாயக்க மற்றும் அவரது குடும்பத்தினர் துபாய் சென்றமை தொடர்பான தகவல் கள் அரசாங்கத்திற்கு கிடைக்க வில்லை எனக் கூறப்படுகிறது. அதேவேளை மஹேஷ் சேனாநாயக்க இலங்கையின் ராணுவத் தளபதியாக கடமை யாற்றிய வேளையில் ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி நடந்த ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பாக இந்திய அரசு முன்கூட்டியே வழங்கிய எச்சரிக்கை ராணு வத்திற்கும் கிடைத்திருந்ததாக சிங்கள பத்திரிகை ஒன்று குறிப்பிட் டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here