`வலிமை’ படத்தின் இசையமைப்பாளர் இமானா?

‘நேர்கொண்ட பார்வை’ படத்திற்குப் பிறகு, இயக்குநர் ஹெச். வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம், ‘வலிமை’. இப்படத்தை போனி கபூர் தயாரிக்கிறார். ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் உருவாகும் இந்தப் படத்தின் பூஜையின்போதே, யுவன் ஷங்கர் ராஜா இசை, நீரவ் ஷா ஒளிப்பதிவு, திலீப் சுப்புராயன் ஸ்டன்ட் கோரியோ என ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் பணியாற்றிய அதே கூட்டணிதான் இந்தப் படத்திலும் இணைந்துள்ளது என டெக்னிக்கல் குழு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

படத்தின் வில்லனும் ஹீரோயினும் முடிவாகாத நிலையில், ஹைதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இதனை முடித்த படக்குழு, அஜித் இல்லாத பகுதியை சென்னையில் எடுத்துவருகிறது. இந்நிலையில், ‘வலிமை’ படத்தின் இசையமைப்பாளர் மாற்றம் என்றும், யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பதில் ‘விஸ்வாசம்’ படத்திற்கு இசையமைத்த இமான்தான் ‘வலிமை’ படத்திற்கும் இசையமைக்கிறார் என்றும் செய்தி வெளியானது. இது தொடர்பாக, படக்குழுவிடம் பேசியபோது, “படத்தின் இசையமைப்பாளரில் எந்த மற்றமுமில்லை. இமான் இசையமைக்கிறார் என்பது தவறான தகவல்” என்று கூறிவிட்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here