இந்திய விளையாட்டுத் துறைக்கு ஏற்றமிகு ஆண்டு 2019

புதுடில்லி –

இந்திய விளையாட்டுத்துறைக்கு 2019 ஆண்டு ஏற்றமிகு ஆண்டாக விளங்குகிறது. 2020இல் தோக்கியோ ஒலிம்பிக் போட்டி, டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை நடைபெறவுள்ள நிலையில் இந்தியா பல்வேறு சாதனைகளை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக இந்திய கிரிக்கெட் அணிக்கு 2019 ஆண்டு மிகச்சிறந்த ஆண்டாகவே அமைந்திருக்கிறது.

sindhu

டெஸ்ட், ஒருநாள் தொடர்களில் வெற்றியைக் குவித்த விராட் கோஹ்லி தலைமையில் இந்திய அணி வலுவான அணியாக உருவெடுத்துள்ளது.
உலகக் கோப்பை போட்டியில் தொடக்க சுற்றில் இங்கிலாந்துடன் பெற்ற ஒரு தோல்வியை தவிர மற்ற ஆட்டங்களில் அபார வெற்றிபெற்ற நிலையில் அரையிறுதியில் நியூசிலாந்துடன் தோல்வியடைந்தது சறுக்கலாக அமைந்தது.
வெஸ்ட் இண்டீஸ், தென்னாப்பிரிக்கா, வங்காளதேச தொடர்களில் அபார வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்திய அணி 8 டெஸ்ட் ஆட்டங்களில் 7இல் வென்று, 1 ஆட்டத்தில் டிரா கண்டது.

ஒருநாள் போட்டியில் 28 ஆட்டங்களில் 19இல் வெற்றியும் 8இல் தோல்வியும் 1இல் எந்த முடிவும் இல்லாமல் போனது. ரோஹித் சார்மா ஒரே உலகக் கோப்பையில் 5 சதங்களை விளாசி உலக சாதனை படைத்தார். ரோஹித் 1,490, கோஹ்லி 1,377 ரன்களை குவித்தனர்.

டி20 போட்டியில் 16இல் 9இல் வெற்றியும் 7இல் தோல்வியும் கண்டது. 2020இல் ஆஸி.யில் நடைபெறவுள்ள டி20 உலகக் கிண்ணப் போட்டியில் கிண்ணத்தை வெல்ல இந்தியா காத்துக் கொண்டிருக்கிறது.

இந்திய ஹாக்கி அணி 2019இல் குறிப்பிடத்தக்க வெற்றிகளை குவித்தது. மேலும் 2020 தோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது. டென்னிஸ் அரங்கிற்கு நட்சத்திர வீராங்கனை சானியா மிர்சா மீண்டும் திரும்பியுள்ளார். ஜாம்பவான் லியாண்டர் பயஸ் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

துப்பாக்கி சுடுதல் போட்டியில் 2019 பொற்கால ஆண்டாக விளங்கியது. இந்திய துப்பாக்கி சுடும் வீரர், வீராங்கனைகள் பல்வேறு சாதனைகளை படைத்தனர். மனு பேகர் உலக குறிசுடுதல் போட்டியில் 4 தங்கத்தை வென்றுள்ளார். மேலும், தோக்கியோ ஒலிம்பிக் குறிசுடும் போட்டிக்கு 15 இந்தியர்களும் தேர்வு பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here