இன்ப அதிர்ச்சியில் தீபிகா படுகோன்!

பாலிவுட்டின் பிரபல நடிகையான தீபிகா படுகோன், தற்போது சபாக் என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸாக இருக்கிறது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மி என்பவரின் கதையை அடிப்படை யாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.

நடிகை தீபிகா படுகோனுடைய 34ஆவது பிறந்த நாளை மும்பையில் கொண்டாட அவரும் அவரின் கணவருமான நடிகர் ரன்வீர் சிங் இருவரும் மும்பை விமான நிலையத்திற்கு நேற்று முன்தினம் காலை வந்து இறங்கினர்.

அங்கே காத்திருந்த ஒரு புகைப்படக் கலைஞர் சர்ப்ரைஸாக கேக் ஒன்றை தீபிகா படுகோனிடம் நீட்டியதும் இன்ப அதிர்ச்சியானார் தீபிகா படுகோன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here