மலேசியாவில் பரபரப்பாகப் பேசப்பட்டு வரும் சூப்பர் ஸ்டார் ரஜினியின் தர்பார் திரைப்படம் திட்டமிட்டப்படி இன்று வெளியீடு காணும் என லோட்டஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இன்று 9.1.2020 முதல் உலகளவில் திரையிடப்படும் தர்பாரை மலேசியாவின் அபிமானத்தைப் பெற்ற 180க்கும் மேற்பட்ட திரையங்குகளிலும் மக்கள் கண்டு களிக்கலாம்.
தர்பார் தொடர்பான வதந்திகளும் வைரல்களும் எங்களுக்கு மேன்மேலும் புரமோஷனை ஏற்படுத்தியிருப்பதுடன் மக்களிடையே இத்திரைப்படத்தைக் காணும் பெரும் ஆர்வத்தையும் அதிகரித்திருப்பது மகிழ்ச்சிதான் என்கிறது லோட்டஸ்.
இதுவரை வெளிவந்த ரஜினி திரைப்படங்களை விடவும் தர்பார் அதிக வசூலைப் பெற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை. ஏனெனில் மெகா பட்ஜெட்டில் உருவான இந்தத் திரைப்படத்திற்கு இணைய தளங்களில் விமர்சனங்கள் குவிந்து வருகின்றன என லோட்டஸ் நிறுவனம் தெரிவித்தது.