சிட்னி:
குயின்ஸ்லாந்தில் நடந்த பள்ளியின் 100-வது ஆண்டு விழாவில் தனது நண்பரை பாம்பிடமிருந்து காப்பாற்ற முயன்றபோது, பாம்பு கடித்து உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட இரண்டு ஆடவர்களின் பெயர்களும் வெளியிடப்படவில்லை. என்றாலும் பாம்பால் கடிபட்டவருக்கு வயது 69 என்றும் மற்றவருக்கு வயது 65 என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
சனிக்கிழமை மாலை 6.30 மணியளவில், பள்ளியின் 100வது ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்துகொண்டனர். அப்போது இருவரையுமே பாம்பு கடித்துவிட்டது.
அந்த இருவருக்கும் குயீன்ஸ்லாந்து மருத்துவ வாகனச் சேவைப் பிரிவினர் சிகிச்சை அளித்தனர்.
ஒருவரை மருத்துவர்கள் எப்படியோ காப்பாற்றிவிட்டனர். மற்றொருவரை காப்பாற்ற 30 நிமிடம் போராடினர்.
அவரைக் காப்பாற்ற நச்சுமுறிவு மருந்துடன் மருத்துவர்கள் விரைந்து வந்து கொண்டிருந்தார்கள். ஆனால் அதற்குள்ளாக அவர் உயிர் போய்விட்டது என்று தெரிவிக்கப்பட்டது.
குறித்த நபரைக் கடித்த பழுப்பு நிற பாம்பின் விஷம் காரணமாக இதய செயலிழப்பு ஏற்பட்டதாக மருத்துவ அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.





















