சுருதிஹாசனின் கொரோனா மீம்ஸ்

நடிகர், நடிகைகள் கொரோனா விழிப்புணர்வு வீடியோக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

நடிகை சுருதிஹாசனும் தனது இன்ஸ்டாகிராமில், “வீட்டில் தனித்து இருங்கள். நான் என்னைப் பற்றி நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன். இந்த நேரத்தை சுயபரிசோதனை செய்துகொள்வதற்கு பயன்படுத்துங்கள். வீட்டிலேயே இருங்கள். அனைவரிடத்திலும் அன்பு காட்டுங்கள்” என்று கூறியுள்ளார்.

இதைப் பலரும் வரவேற்றனர். ஒருவர் சுருதிஹாசன், வடிவேலு புகைப்படங்களை இணைத்து, “இன்னும் 7 நாளில் போதி தர்மரைக் கொண்டு வரவேண்டும்” என்று சுருதிஹாசனுக்கு கட்டளையிடுவதுபோல் தமாசாக மீம்ஸ் வெளியிட்டு இருந்தார்.

இந்த மீம்சை சுருதிஹாசன் தனது வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here