பார்சிலோனாவை 3இல் வீழ்த்தி சூப்பர் லீக் இறுதியாட்டத்திற்கு அட்லெட்டிலோ மெட்ரிட் தேர்வு

ஜெட்டா –

ஸ்பெய்ன் சூப்பர் லீக் கிண்ணப் போட்டி அரையிறுதி ஆட்டத்தில் பார்சிலோனாவை 3-2 என்ற கோல்கணக்கில் வீழ்த்திய அட்லெட்டிகோ மெட்ரிட் இறுதி ஆட்டத்திற்கு தேர்வுபெற்றது.

சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகர் அரங்கில் நடந்த ஸ்பெய்ன் சூப்பர் லீக் கிண்ணப் போட்டி அரையிறுதி ஆட்டங்கள் இரு தினங்களாக நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் முதல் அரையிறுதியில் ரியல் மெட்ரிட்டை எதிர்த்து வெலன்சியா மோதியது.

இந்த ஆட்டத்தில் ரியல் மெட்ரிட் 3-1 என்ற கோல்கணக்கில் வெலன்சியாவை வீழ்த்தி இறுதியாட்டத்திற்கு தேர்வுபெற்றது. இந்நிலையில் நேற்று 2ஆவது அரையிறுதி ஆட்டம் நடைபெற்றது. நடப்புச் சாம்பியன் பார்சிலோனாவை எதிர்த்து அட்லெட்டிகோ மெட்ரிட் விளையாடியது.

46ஆவது நிமிடத்தில் அட்லெட்டிகோ மெட்ரிட்டின் முதல் கோலை கோகோ அடித்தார். பதிலுக்கு 51ஆவது நிமிடத்தில் பார்சிலோனாவின் கோலை மெஸ்ஸி அடித்து சமப்படுத்தினார். ஆட்டம் உச்சக்கட்டத்தை எட்டியபோது 62ஆவது நிமிடத்தில் பார்சிலோனாவின் 2ஆவது கோலை கிறிஸ்மேன் போட்டார். இருப்பினும் 81ஆவது நிமிடத்தில் அட்லெட்டிகோ மெட்ரிட்டின் 2ஆவது கோலை அலாவாரா மொராட்டா அடித்தார்.

ஆட்டம் முடிய 5 நிமிடங்கள் மட்டுமே இருந்தபோது அட்லெட்டிகோ மெட்ரிட்டின் 3ஆவது கோலை அர்ஜெண்டினாவைச் சேர்ந்த இளம் வீரர் ஏஞ்சல் கோரியா அடித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்த ஆட்டத்தில் கண்ட தோல்வியால் பார்சிலோனா கோல்மன்னன் மெஸ்ஸி உட்பட அனைத்து வீரர்களும் மனமுடைந்தனர். நாளை ஞாயிற்றுக்கிழமை ஜெட்டா அரங்கில் நடக்கும் ஸ்பெய்ன் சூப்பர் கிண்ண இறுதி ஆட்டத்தில் ரியல் மெட்ரிட்டை எதிர்த்து அட்லெட்டிகோ மெட்ரிட் மோதுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here