ஆச்சரியப்பட வைக்கும் ஒருவரி பரிகாரங்கள்

ஒருவருக்கு ஏற்படும் எப்படிப்பட்ட பிரச்சனைகளையும் சுலபமாக தீர்க்க சின்ன சின்ன வழிமுறைகள் இருக்கும். ‘இப்படி செய்தால் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று ஒருவரியில் கூறிவிடலாம்’. அப்படிப்பட்ட சில வழிமுறைகள் நம்முடைய பல பெரிய பிரச்சனைகளை தீர்ப்பதற்கு வழிவகுக்கும். ஒரு வரியில் கூறப்படும் அந்த பரிகாரங்கள் என்னென்ன என்பதைப் பற்றி இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளலாம். பூர்வீக சொத்தில் இருக்கும் எப்படிப்பட்ட பிரச்சினையையும் தீர்க்க, உங்களது வீட்டில் திருச்செந்தூர் முருகனை வைத்து,
செவ்வாய்க்கிழமை தோறும் அரளிப்பூ சூட்டி பூஜை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். ஆண்கள், வராத கடனை வசூலிக்க சென்றால், அன்றைய தினம் சூரியன் உதிப்பதற்கு முன்பே கண்விழித்து சவரம் செய்துகொண்டு, கடனை வசூலிக்க செல்லவேண்டும். புதன்கிழமை அன்று இப்படி செய்வது மிகவும் சிறப்பு. கடன் நிச்சயம் வசூலாகும். காதல் கைகூட சித்திரை நட்சத்திரத்தன்று முருகப் பெருமானை வள்ளி தெய்வானையுடன் சேர்த்து வணங்க வேண்டும்.
புது வெள்ளை துணியை வாங்கி பன்னீரில் நனைத்து, காயவைத்து திரி போல் தயாரித்து விளக்கு ஏற்றினால் வீட்டிலிருக்கும் பீடை நீங்கும். வாழைத்தண்டு திரி போட்டு வீட்டில் தீபம் ஏற்ற, தெய்வ குற்றம் நீங்கும். குலதெய்வத்தின் கோபமும் குறையும். விநாயகருக்கு தேங்காய் எண்ணெயால் விளக்கு ஏற்றுவது மிகவும் சிறந்த ஒன்று. மகாலட்சுமிக்கு பசு நெய் தீபம் மிகவும் சிறப்பானது. வீட்டில் தினம்தோறும் நல்லெண்ணெய் தீபம் ஏற்றினால் எல்லாவிதமான பிரச்சனையும் ஒரு முடிவுக்கு வரும்.
வாரம்தோறும் சனிக்கிழமை காலை 7 மணியிலிருந்து 8 மணிக்குள் அரசமரத்தினை 108 முறை வலம் வந்து, அந்த மரத்தின் அடியில் மகாலட்சுமியின் திருவுருவப் படத்தை வைத்து வணங்கினால் மேலும் மேலும் பணம் சேர்ந்து கொண்டே இருக்கும். வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் முருகப் பெருமானை நினைத்து தெற்குப் பகுதியில் மண் விளக்கில், நல்லெண்ணெய் தீபம் ஏற்றி மனமுருகி வேண்டிக்கொண்டால் எப்படிப்பட்ட தீராத கடனும் திருவதற்கான வழி 6 வாரங்களில் தெரிந்துவிடும். 7 பல் உள்ள வெள்ளைப்பூண்டை வாங்கி, பிரித்து 7 பற்களுடன், 7 வர மிளகாயையும் கோர்த்து வீட்டு வாசலில் கட்டி வைத்தால் தீய சக்திகள் உள்ளே வராது. ஒரு பல் பூண்டு, ஒரு வரமிளகாய் மாற்றி மாற்றி கோர்த்துக் கொள்ள வேண்டும். 10 நாட்களுக்கு ஒரு முறை பூண்டையும் வரமிளகாயையும் மாற்றிவிட வேண்டும். துளசி செடியோடு சேர்த்து, அதே தொட்டியில் தொட்டா சிணுங்கி செடியையும் வளர்த்து வந்தால் வீட்டில் வீட்டில் சண்டை சச்சரவுகள் குறையும்.
அருகம்புல்லை கையில் எடுத்துக்கொண்டு செல்லும் எந்த ஒரு காரியத்திற்கு சென்றாலும் அந்த காரியம் நிச்சயம் வெற்றிதான். மாணவர்கள் படிக்கும் போது இடது கையை மேஜையில் ஊன்றி படித்தால், படித்தது மறக்காது. தேர்வு சமயத்திலும் இடது கையை மேஜையில் ஊன்றிகொண்டு தேர்வு எழுதினால் படித்தது அனைத்தும் நினைவிற்கு சுலபமாக வரும். அரசாங்க வேலை கிடைக்க அரசமரத்திற்கு தொடர்ந்து 48 நாட்கள் தண்ணீர் ஊற்றி பராமரிக்க வேண்டும். சர்வ சுகந்தியை வீட்டிலோ அல்லது தொழில் செய்யும் இடத்திலோ நான்கு திசைகளிலும் போட்டு வைத்தால் பணவரவு இருந்து கொண்டே இருக்கும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here