லோகேஷ் கனகராஜ் இயக்கும் மாஸ்டர் படத்தில் விஜய் நடிக்கிறார். கதாநாயகியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கின்றனர்.
சாந்தனு, நாசர், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட மேலும் பலர் உள்ளனர். சென்னை, டில்லி, கர்நாடகா போன்ற இடங்களில் படப்படிப்பு நடந்துள்ளது.
மாஸ்டர் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவை அடுத்த மாதம் சென்னையில் நடத்தவும் படத்தை ஏப்ரல் மாதம் திரைக்குக் கொண்டு வரவும் திட்டமிட்டு இருந்தனர். ஆனால் தற்போது பாடல் வெளியீட்டு விழாவைக் கோவையில் நடத்த ஆலோசிப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
தற்போது மாஸ்டர் பாடல் விழாவுக்கு சென்னையில் அனுமதி கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது என்றும் எனவேதான் கோவைக்கு மாற்றி இருப்பதாகவும் இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது.