கங்கனாவின் 2வது தோற்றம்

மறைந்த முதல் அமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை கதையைத் தலைவி என்ற பெயரில் படமாக்குகின்றனர்.

ஜெயலலிதா வேடத்தில் கங்கனா ரணாவத்தும் எம்.ஜி.ஆர். கதாபாத்திரத்தில் அரவிந்த சாமியும் நடிக்கின்றனர். விஜய் டைரக்டு செய்கிறார். விஷ்ணுவர்தன் இந்தூரி, சாய்லேஷ் சிங் தயாரிக்கின்றனர்.

இந்த நிலையில் ஜெயலலிதாவாக வரும் கங்கனா ரணாவத்தின் 2ஆவது தோற்றமும் தற்போது வெளியாகி உள்ளது. இதில் அ.தி.மு.க. கட்சி கொடி நிறத்தில் பார்டர் உள்ள சேலை அணிந்து கங்கனா ரணாவத் காட்சி அளிக்கிறார். இந்தத் தோற்றம் சிறப்பாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி உள்ளனர். தலைவி படத்தில் பூர்ணா, மதுபாலா ஆகியோரும் நடிப்பதாகத் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here