அம்னோ தலைமையில் ஜோகூரில் புதிய அரசு

ஜோகூர்பாரு –

நம்பிக்கைக் கூட்டணி அரசாங்கம் கவிழ்ந்ததை அடுத்து ஜோகூர் மாநிலத்தில் அம்னோ தலைமையில் ஒரு புதிய கூட்டணி அரசாங்கம் மலர்ந்தது.

ஜோகூர் மாநிலத்தின் 18ஆவது புதிய மந்திரி பெசாராக ஜோகூர் அம்னோ தலைவர் டத்தோ ஹஸ்னி முகமட் பொறுப்பேற்றார்.

நேற்று பிற்பகலில் ஜோகூர் பாருவில் உள்ள இஸ்தானா புக்கிட் செரினி அரண்மனையில் மாநில ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் முன்னிலையில் அவர் அதிகாரப்பூர்வமாகப் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொண்டார்.

அம்னோ தலைமையிலான புதிய அரசாங்கத்தில் மஇகா, பாஸ், பார்ட்டி பிரிபூமி பெர்சத்து ஆகிய கட்சிகள் இடம்பெறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here