பணம் பழசு; அரிசி புதுசு: இந்தியாவின் முதல் ஏ.டி.எம்., ஒடிசாவில் திறப்பு

புவனேஸ்வர்: ஒடிசா உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் நலத்துறை அமைச்சர் கிருஷ்ண சந்திர பத்ரா, இந்தியாவின் முதல் அரிசி ஏ.டி.எம்., மையத்தை புவனேஸ்வரில் திறந்து வைத்தார்.

அரிசி ஏ.டி.எம்.,ல் ரேஷன் கார்டுதாரர்கள் தங்கள் ரேஷன் கார்டு எண்ணை பதிவிட்டு, 25 கிலோ அரிசி வரை பெற்று கொள்ளலாம். மக்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இது மத்திய அரசு வழங்கும் மானிய அரிசியின் திருட்டை கணிசமாக குறைக்கும்.

அமைச்சர் கிருஷ்ண சந்திர பத்ரா நிருபர்கள் சந்திப்பில்,” பயனாளிகளுக்கு, சரியான எடையில் அரிசி வழங்கப்படுவதை உறுதி செய்வதே குறிக்கோள். இது இந்தியாவின் முதல் அரிசி ஏ.டி.எம்.,. பல்வேறு சோதனைகளுக்கு பிறகு தான் திறக்கப்பட்டது. ஒடிசாவில் 30 மாவட்டங்களில் அரிசி ஏ.டி.எம்.,யை விரிவுபடுத்த முடிவு செய்துள்ளோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here