கொரோனா வைரஸ் ‘பெருங்கொள்ளை நோய்’ உலக சுகாதார நிறுவனம் பிரகடனம்

கொரோனா வைரஸ் 'பெருங்கொள்ளை நோய்'

ஜெனிவா, மார்ச் 12-
உலகை அச்சுறுத்தி வரும் கொவிட் -19 எனப்படும் கொரோனா நோய் பெருங்கொள்ளை நோய் வகையைச் சார்ந்தது எனவும் இதனை எதிர்த்து உலக நாடுகள் பாதுகாப்பு ரீதியாக போராட வேண்டும் எனவும் உலக சுகாதார நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.

உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டாக்டர் தெட்ரஸ் அடானம் கிப்ரியசஸ் மேற்கண்ட அறிவிப்பை உலக நாடுகளுக்கான சுகாதார தொடர்பிலான எச்சரிக்கையாக விடுத்திருக்கிறார்.

கடந்த இரண்டு வாரக் காலகட்டத்தில் மட்டும் இந்நோய் 13 மடங்கு அதிகரித்திரித்துள்ளது. உலக நாடுகள் கொரோனா கிருமிகளை கட்டுக்குள் கொண்டு வர புதிய செயல்முறைகளை திட்டமிட்டு அமல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என கருத்துரைத்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here