சொத்துடமை – நில மேம்பாட்டு நிறுவன அலுவலகத்தில் அதிரடி சோதனை

நில மேம்பாட்டு நிறுவன அலுவலகத்தில் அதிரடி சோதனை

சுங்கை பூலோ, மார்ச் 12

மலேசிய சொத்துடைமை முகவர் , மதிப்பீட்டு வாரியம் இன்று புஞ்சாக் ஆலாமில் உள்ள ஒரு சொத்துடமை மற்றும் நில மேம்பாட்டு நிறுவன அலுவலகத்தில் அதிரடிச் சோதனை மேற்கொண்டது. இச்சோதனையில் வாரியத்தின் உறுப்பினர் இஷால் இஸ்மாயில், பதிவாளர் ஆர். மகாலெட்சுமி ஆகியோர் தலைமையேற்றனர்.

இந்த குறிப்பிட்ட நிறுவனம் எங்களிடமிருந்து எந்தவொரு உரிமமும் அங்கீகாரமும் பெறாமல் 2 ஆண்டுகளுக்கு மேலாக செயல்பட்டு வருகின்றது.

உரிமம் பெறாததை அடுத்து இந்நிறுவனத்திற்கு நாங்கள் கடந்த ஆண்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அதற்கு பதில் ஏதும் கிடைக்கவில்லை.

இதைத் தொடர்ந்து இந்த நிறுவனத்தில் பண மோசடி நிகழ்வதாக பொதுமக்களிடமிருந்து புகார் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து இன்று சிலாங்கூர் மாநில காவல் துறையினரின் ஆதரோவோடு புஞ்சாக் ஆலாமில் உள்ள அலுவலகத்தில் அதிரடிச் சோதனை மேற்கொண்டோம்.

அங்குள்ள பணியாளர்கள் மூலம் இங்குள்ள கோப்புகளை பரிசோதித்தோம். சிலவற்றை அடுத்த கட்ட சோதனைக்காக கைப்பற்றியுள்ளோம் என இஷால் இஸ்மாயில் தெரிவித்தார்.

  • எஸ் . வெங்கடேஷ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here