மரத்தில் காய்க்கிறதா பணம்

மரத்தில் காய்க்கிறதா பணம்

கோலாலம்பூர், மார்ச் 12-

மக்களுக்கான பிரச்சினைகள் கொஞ்சம் நஞ்சமல்ல. எதைக்கண்டாலும் பயம் எனக்கு என்பதுபோல் மக்களின் பயம் அதிகரித்துக்கொண்டே போகிறது.

நாளடையில் போபியா எனவும் மாறும் சாத்தியம் அதிகமாகிக்கொண்டே போகும் என்றும் பேசப்படுகிறது.

ஒருப்பக்கம் விலையேற்றம், மறுபக்கம் கோவிட் 19 என்றெல்லாம் தாக்கினால் என்ன செய்வது. மக்கள் பரிதாபத்திற் குரியவர்களாகிவிட்டனர் என்கிறார் பினாங்கு பிரமுகர் எம்.முனிய்யாண்டி.

சின்ன சின்ன விஷயங்களில் கூட மக்களில் படபடப்பு அதிகரித்துவிடுகிறது. குறிப்பாக அறிமுகமாகியுள்ள ரேப்பிட் பஸ்களில்  ட்ச் அண்ட் கோ அட்டையில்லாமல் பயணிக்கமுடியாது. என்றாகிவிட்டது.

ரேப்பிட் பஸ்களின் அறிமுகத்தால் பெருத்த நன்மைகள் இருக்கின்றன. நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் இப்போது ஏற்படவில்லை. ஒரு வெள்ளியில் பயணம் நிர்ணயிக்கப் பட்டுவிடுகிறது என்பதில் புறநகர் மக்கள் மகிழ்ச்சியடந்திருந்தாலும் கவலை என்பது வீடாது விரட்டிக்கொண்டுதான் இருக்கிறது.

டச் அண்ட் கோ அட்டையில் பணம் கண்டிப்பாக இருக்கவேண்டும். இல்லையென்றால் என்ன ஆகும். கால் நடைதான் என்றாகிவிடும்.
ஐந்து வெள்ளிக்கு அட்டையில் பணம் ஏற்றவும் முடியாது. பத்துவெள்ளிக்கு அட்டையில் முன் பணம் ஏற்றிக் கொள்ளவேண்டும்.

இங்கு இன்னொரு சிக்கலும் அட்டையில் ஒட்டிக்கொண்டிருக்கிறது என்பது பலருக்குத்தெரியாது. அதாவது பத்து வெள்ளிக்கு முன்பணம் ஏற்றம் செய்துகொண்டால் ஐம்பது காசுகள் காணாமல் போய்விடு மந்திர சக்தி ஒவ்வொரு அட்டையிலும் இருக்கிறது. இது, சபிக்கப்பட்ட தந்திரம்.

முன்பணம் என்பதற்கே டச் அண்ட் கோ நிறுவனம் அன்பளிப்பு தரவேண்டும். அதைவிடுத்து செலுத்தப்படும் தொகையில் ஐம்பது காசு கழிக்கப்படுவது எந்த வகையில் நியாயம் என்கிறார் முனியாண்டி.

இதில் மக்கள்தாம் சீவை செய்கிறார்கள். பயணம் போகாவிட்டாலும் முண்பணம் வைப்பாக இருக்கிறது. அப்படியென்றால் வைப்புத்தொகைக்கு யார் பணம் கொடுக்க வேண்டும் என்கிறார் அவர்.

இதற்கு பிரதியுபகாரமாக ஒரு யோசனையையும் அவர் கூறுகிறார். இந்த யோசனையை டச் அண்ட் கோ பரிசீலிக்கலாம்.

பயன்படுத்தும்போது  டச் அண்ட் கோ அட்டையில் போதிய பணம் இல்லையென்றாலும் அனுமதிக்கலாம். முதல் முறைக்கு இந்தக் கட்டுப்பாடு அமைத்துக்கொள்ளலாம். அதற்குப்பின் கட்டண முன்பதிவேற்றம் செய்யும்போது அதனோடு கூடுதலாக ஐம்பது காசு கழித்துக்கொள்ளல்லாம்.

பயணிகள் இறுதிநேரத்தில் இப்படிச்செய்ய அனுமதிக்கபடவேண்டும். இந்த முறை கார் நிறுத்துமிடத்தில் இருக்கிறது. கார் நிறுத்தும்போது கட்டணம் பற்றிய கவலை இல்லாமல் நிறுத்தாலாம். வெளியேறும்பொது மட்டும் போதிய கட்டணம் இருக்கவேண்டும். அவ்வளவுதான்.

இதில்,இன்னொரு செய்தியும் உண்டு, இப்போதெல்லாம் நெடுஞ்சாலைகளில் சாலைக் கட்டணம் செலுத்தும் முகப்பிடம் இல்லை. வாகனமோட்டிகளுக்கு இது பெரிய பாதிப்பாக இருக்கிறது. போதிய கட்டணம் இல்லையெனில் அவர்களின் நிலைமை என்ன என்கிறார் முனியாண்டி.

மக்கள் இல்லாமல் நுகர்வோர் இல்லை.மக்களே பாதிக்கப்பட்டால் நிறுவனங்கள் எதற்கு மக்களை சுரண்டவா?
                                                                                                                            இளமணி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here