டொனால்ட் டிரம்புக்கும் கொரேனாவா?

டொனால்ட் டிரம்புக்கும் கொரேனாவா?

சாவ் பாவ்லோ, மார்ச் 12-
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்து விட்டு வந்த பிரேசில் அரசாங்க உயர்மட்டக் குழுவைச் சேர்ந்த ஒருவர் தனக்கு கொரோனா வைரஸ் தொடர்பான சுகாதார சோதனை மேற்கொள்ளப்பட்டதாக ஒப்புக் கொண்ட பின்னர் டிரம்ப்புக்கும் இந்நோயின் தாக்கம் இருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

அமெரிக்க அதிபர் விரைந்து தம்மை பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்ற நெருக்குதல்களும் அமெரிக்க குடிமக்களால் வழங்கப்பட்டு வருகிறது.

அதிபரை சோந்தித்து விட்டு வந்த பிறகு எனக்கு கொரோனா தாக்குதல் தொடர்பான பரிசோதனை நடத்தப்பட்டு விட்டது என போல்ஹா டி சாவ் பாவ்லோ சஞ்சிகைக்கு அளித்த பேட்டியில் பிரேசில் நாட்டு அதிபர் ஜாய்ஸ் போல்சோநாரேவில் தொடர்புத் துறை செயலாளர் பாபியோ வாஜன்கார்ட்டனின் குறிப்பிட்டுள்ளார்.

புளோரிடாவில் உள்ள அதிபரின் சொந்த உல்லாசத் தளம் ஒன்றில் எங்கள் சந்திப்பு நடந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார். சாவ் பாவ்லோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் கொரோனா சோதனை நடத்தப்பட்டதாகவும பதிலுக்காகக் காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் பிரபல நடிகர் டோம் ஹென்க் தனக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் இருப்பதாக அறிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் அதற்கான பரிசோதனை நடத்தப்பட்டபோது நோய்த் தாக்குதல் இருப்பது தனக்கும் தனது மனைவிக்கும் உறுதிப்படுத்தப்பட்டதாக தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

இதனிடையே, ஈரானிய துணை அதிபர் எஷாக் ஜஹாங்கிரிக்கும் கொரோனா நோய்த்தொற்று தாக்குதல் ஏற்பட்டிருக்கலாம் என அந்நாட்டின் அரசு சாரா தகவல் நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here