மலேசிய கத்தோலிக்கர்களின் வாராந்திர சந்திப்புகள் அனைத்தும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை அதன் செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.
கத்தோலிக்கர்களின் வாரந்திர கூட்டம் வார நாட்களிலும் வார இறுதி நாட்களிலும் இடம்பெறுவது வழக்கம். கொரோனா 19 தொற்றின் காரணமாக மார்ச் 19 தொடங்கி மார்ச் 29 வரை எந்த சந்திப்பும் நடைபெறாது என அறிவிப்பு செய்யப்பட்டிருக்கிறது.
கொரோனா பாதிப்புகளின் விவரங்கள் அணுக்கமாகக் கண் காணிக்கப்பட்டு விவரங்கள் அறிவிக்கப்படும். அதேவேளை தங்கள் வாராந்திர நிகழ்ச்சிகள் நிறுத்தப்பட்டிருப்பதால் இளைஞர்கள் நிகழ்ச்சிகள், ஒன்றுகூடல், சபைகூடல், சமயம் நிகழ்சிகளும் இடம்பெறாது.
இறப்பு, திருமணம் ஆகியவை நெருங்கிய உறவினர்களோடு மட்டுமே நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.