கொரோனாவை தடுக்க இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற தயார் – இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே

கொரோனாவை தடுக்க இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற தயார்

கொழும்பு, மார்ச் 15-

கொரோனாவை தடுக்க இந்தியாவுடன் சேர்ந்து பணியாற்ற தயாராக உள்ளதாக இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே அறிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க தெற்காசிய நாடுகள் ஒன்றுகூட வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்த நிலையில், இதற்கு தனது சமூக வலைத்தள பக்கத்தில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே பதிலளித்துள்ளார்.

சார்க் நாடுகளின் அறிவு மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ள ஒரு சந்தர்ப்பமாக, சகோதரத்துவ நாடு என்ற வகையில், இந்தியாவுடன் இணைந்து செயல்பட தயார் என்று அவர் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here