தாதிமைப்போற்றுக!

தாதிமைப்போற்றுக!

கோலாலம்பூர் , மார்ச் 15-

அரசாங்க மருத்துவமனைகளில் பணிபுரியும் தாதியர் இருபாலருக்கும் ஆயிரம் வணக்கங்கள் என்று சொன்னால் ஊழல் என்று அர்த்தப்படுத்திக்கொள்ளக்கூடாது. சிறந்த ஊழியம் என்றாகப் போற்றவேண்டும்.

கொரோனா 19 பாதிப்பால் மருத்துவமனைகளில் கண்காணிப்பில் இருக்கும் தாதியர்கள், மருத்துவர்கள் அனைவரும் தெய்வம் போன்றவர்கள் என்றே மதிக்கப்படவேண்டும்.இவர்களின் சேவைக்கு ஈடான சேவை இப்போதைக்குத் தட்டுப்படவில்லை.

இவர்களும் மனிதர்கள்தாம். பேராபத்து நிறைந்த மனிதர்களைக் கவனிக்கும் பொறுப்பிலுள்ள ஆண், பெண் இருபாலர்களையும் கொரொனா 19 விசாரித்து கைகுலுக்கிக் கொள்ளாது. உங்களையும் கொல்வேன் என்றுதான் சபதம் போடும்.
பேராபத்தோடு பணியை மட்டும் செய்யாமல் பணிவிடைகள் செய்யும் தாதியர்களை வணங்காவிட்டாலும் பரவாயில்லை.தூற்றாமல் இருந்தாலே போதும்.

ஒரு பரிங்சோதனையின்போது வலிதாங்கமுடியாமல் தாதியரை அறைந்துவிட்ட நோயாளியை மன்னிக்கும் மனப்பான்மை இவர்களைத் தவிர யாருக்கும் வராது.
நோயாளியின் குடும்பத்தாரிடம் சிரித்துக்கொண்டே கூறிய தாதியர் அவரின் வேதனையை உணர்ந்து கூறியதில் மதம் குறுக்கிடவில்லை. மனம் மட்டுமே இருந்தது.
ஆனால், கொரோனா 19 ஆபத்து என்றும் தெரிந்தும் வழங்கும் சேவையில் எந்த சேதாரமும் இல்லையென்றால், பாதுகாப்புமுறைதான் காரணமாக இருக்கும்.

இதுதான் உண்மை. மக்களும் ஒத்துழைக்கவேண்டும். ஒத்துழைத்தால் கொரோனா 19 வராது. வந்தால் தாதியரும் விடமாட்டார்கள் அல்லவா. தாதியரைப்போற்றுவோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here