வெ.6 லட்சம் மதிப்புள்ள சட்டத்திற்குப் புறம்பான சிகரெட்டுகள் பறிமுதல் இருவர் கைது

சிகரெட்டுகள் பறிமுதல் இருவர் கைது

பத்து பகாட் தாமான் சோகாவில் உள்ள வீடொன்றில் அதிரடிச் சோதனையில் ஈடுபட்ட பொது இயக்கப்படை 415,120 சிகரெட்டுகள், 9,720 வெள்ளி ரொக்கம் கிடைத்தன என்று இப்படையின் தலைவர் சீப்த் ஜாபார் கைமி தெரிவித்தார்.

ஓப்ஸ் ஞா 1 நடவடிக்கையில், விநியோகத்திற்கு வைத்திருந்த இச்சிகரெட்டுகளைப் கைப்பற்றியதாக அவர் தெரிவித்தார்.

இதில் இருவர் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் பயன்படுத்திய காரை விற்றதில் கிடைத்த ரொக்கமாக இருக்கலாம் என்றார் அவர்.  பறிமுதல் செய்யப்பட்ட இப்பொருட்களின் மதிப்பு 609,288 வெள்ளியாகும். சுங்கச் சட்டம் 1967 இன் பிரிவு 135 இன் கீழ் இக்குற்றம் விசாரணைக்குட்படுத்தப்பட்டிருபதாக அவர் மேலும் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here