கோவிட் -19 காரணமாக ஆதரவற்ற நிலையில் இருக்கும் குழந்தைகள் பற்றி இன்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்படும்

கோலாலம்பூர்: கோவிட் -19 நோயால் பெற்றோரை இழந்து ஆதரவற்று இருக்கும் குழந்தைகளின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிவரங்கள் இன்று மக்களவையில்  விவாதிக்கப்படும்.

இன்றைய கூட்டத்தின் உத்தரவின்படி, ஹன்னா யோவ் (PH-Segambut) வாய் மொழியாக கேள்வி பதில் நேரத்தின் போது எழுப்பப்பட வேண்டிய விஷயம் பெண்கள், குடும்பம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சர் ரீனா ஹருனுக்கு அனுப்பப்படும்.

இந்த குழந்தைகளின் நல்வாழ்வைக் கவனிப்பதில் எடுக்கப்படும் நடவடிக்கைகளைக் குறித்தும் அமைச்சரிடம் யோ விளக்கம் கேட்கவிருக்கிறார்.

இதற்கிடையில், அசிசா முகமட் டன் (பிஎன்-பியூஃபோர்ட்) தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா அமைச்சர் அன்னுார் மூசாவிடம் சமூக ஊடக முறைகேட்டைத் தடுக்க எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை குறித்து கேள்வி எழுப்புவார்.

வாய்மொழி கேள்வி-பதில் அமர்வின் போதும், அன்வார் இப்ராஹிம் (PH- போர்ட்டிக்சன்) எரிசக்தி மற்றும் இயற்கை வளத்துறை அமைச்சர் தக்கியுத்தீன் ஹாசனிடம் ஒரு கேள்வி எழுப்புவார்.

14 ஆவது நாடாளுமன்றத்தின் நான்காவது கூட்டத்தொடர் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாகோப் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் நடைபெறுகிறது. இந்த மக்களவை அமர்வு அக்டோபர் 12 வரை 17 நாட்கள் நடைபெறும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here