என் மகன் மீது பழி போடுவதா?

கோலாலம்பூர் –

என் குடும்பத்தின் மீது அபாண்டமாகப் பழி சுமத்திக் கொண்டிருக்கும் சதிகாரர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜசெக தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் எச்சரித்தார்.

கடந்த பிப்ரவரி 29ஆம் தேதி சிங்கப்பூர் விமான நிலையத்தில் என் மகன் கைது செய்யப்பட்டான் என்றும் அவனிடம் இருந்து 20 லட்சம் வெள்ளி பறிமுதல் செய்யப்பட்டது என்றும் சமூக ஊடகங்களில் வெளியான செய்திகளில் உண்மை இல்லை.

சிங்கப்பூரில் சிக்கிக் கொண்ட என் மகனைக் காப்பாற்றுவதற்காக அன்றைய தினம் நான் சிங்கப்பூருக்குச் சென்றேன் என்று பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

அன்றைய தினம் நான் கோலாலம்பூரில்தான் இருந்தேன். நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகள் குறித்து நான் நம்பிக்கைக் கூட்டணித் தலைவர்களுடன் அன்றைய தினம் கலந்து பேசினேன்.

ஆனால் என் மகன் கைதாகி விட்டான் என்ற தகவலைக் கேட்டதும் நான் விமானத்தில் சிங்கப்பூர் சென்றதாகக் கூறப்படுவது உண்மையல்ல.

இது அம்னோ, பாஸ் போன்ற கட்சிகளின் சதிச்செயல். அம்னோ இளைஞரணி உச்சமன்ற உறுப்பினருமான வான் முகமட் அஸ்ரி (பாபாக் கோமோ) இதுபோன்ற உண்மைக்குப் புறம்பான செய்திகளை வெளியிட்டு என் குடும்பத்தின் நற்பெயருக்குக் களங்கத்தை ஏற்படுத்துகிறார். இது ஒன்றும் புதிதல்ல.

என்னுடைய இன்னொரு மகன் மீதும் பழி சுமத்தினர். தன்னுடன் படிக்கும் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்தான் என்றும் கூறினார்கள் என்று நேற்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் லிம் குவான் எங் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here