மலாக்கா,
வெள்ளி 4லட்சம் செலவில் அழகிய வண்ணப்பாடுகளுடன் பிரமாணடமான முறையில் இன்று கும்பாபிஷேகம் 6.10.2023 வெள்ளிக்கிழமை காலை மணி 7.10 மணி முதல் 7.40குள் மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது ரும்பியா , அலோர்காஜா அருள்மிகு மகா கருமாரியம்மன் தேவஸ்தானம்.
1989ஆம் ஆண்டு இவ்வாலய இராஜகோபுரம் கட்டப்பட்டு முதல் முதல் கும்பா பிஷேகம் நடைபெற்றது.
சுற்று வட்டார மக்களின் கண்கண்ட தெய்வமாக அருள்பாலித்து வரும் மகா கருமாரி அம்பிகையின் திருக்குட நன்னீராட்டு பெருஞ்ச்சாந்திப் பெருவிழாவை கஜா பெராங்,ஸ்ரீ சுப்பிரமணியர் ,திரெளபதை அம்மன் ஆலயம் தலைமை குருக்கள் சிவாகம இரத்னா சிவ ஸ்ரீ பி.டி சண்முகம் தலைமையில் ஆலய ஸ்தானிகர் சிவ ஸ்ரீ கணேசன் சிவம் மற்றும் பிரதான ஆச்சாரியர்களுடன் இனிதே நடைபெற்றது.
04.10.2023 புதன் கிழமை இரண்டாம் கால யாக வேள்வி காலை 8.00 மணிக்கு தொடங்கி காலை 10.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை பக்தர்கள் சுவாமி பீடங்களில் வெள்ளி தங்கம், நாணயங்கள் , நவரத்தினங்கள் வைத்து,மாலை 5.30 மணிக்கு மூன்றாம் கால யாக வேள்வி, வேதம் ,பராயணம் திருமுறை பாராயணங்கள் நவரத்தின, யந்திர, பிம்ப ஸ்தாபனம் நடைபெற்று இரவு 9.30 மணிக்கு பூர்ணாஹூதி நடைபெற்றது.
5.10.2023 வியாழக்கிழமை காலை 6.00 மணி தொடக்கம் நான் காம் கால யாக வேல்வி, வேதம் , பராயணம் காலை 10.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை பக்தர்கள் சுவாமிக்கு எண்ணெய் வைத்து மாலை 5.30 மணிக்கு ஐந்தாம் கால யாக வேள்வி தொடங்கி இரவு 9.30 மணி பூர்ணாஹூதி நடைபெற்றது.
இன்று 6.10.2023 வெள்ளிக்கிழமை காலை 4.30 மணிக்கு ஆறாம் கால வேல்வி தொடங்கி காலை 6.00 மணிக்கு கடங்கள் புறப்பாடு ஆகி காலை 7.10 முதல் 7.40 மணி வரை ஸ்ரீ மகா கருமாரியம்மன் இராஜ கோபுரம், மூலாய கோபுர கலசங்களுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்று இதர பரிவார மூர்த்திகளுக்கு திருக்குட நன்னீராட்டு விமரிசையாக நடைபெற்றது.
அதன் பிறகு காலை மணிக்கு 8.00 க்கு மஹா தீபாரதனை , காலை 10.30 மணிக்கு மகேஸ்வர பூஜை நடைபெற்று அன்னதானம் வழங்கப்பட்டது.
பக்தப் பெருமக்கள் திரளாக வந்து அம்பாளின் அருள் ஆசியைப் பெற்றுச் செல்வதாக ஆலயத் தலைவர் இராதாகிருஷ்ணன் கூறினார்.




















