சீனாவில் கொரோனாவை கட்டுபடுத்த முக்கிய பங்காற்றிய ஜப்பான் மருந்து

ஜப்பான் மருந்து

யுகான், மார்ச் 19- 

உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, தினந்தோறும் ஏதேனும் ஒரு நாட்டில் உயிரிழப்பு ஏற்பட்டு கொண்டு தான் இருக்கிறது. இதுவரை இந்த வைரஸ் காரணமாக 8,961 பேர் உயிரிழந்துள்ளனர். சீனாவில் இந்த வைரஸ் பரவிய நிலையில், அதை அந்நாடு கட்டுக்குள் கொண்டு வந்துவிட்டது. சீனாவில் நேற்று எந்த பாதிப்பும் பதிவாக வில்லை.

ஆனால் இத்தாலி, ஈரான், பிரான்ஸ், போன்ற நாடுகள் தற்போது கொரோனா பிடியில் சிக்கி தவிக்கின்றன. இதனால் இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதில் அனைத்து நாடுகளும் தீவிரம் காட்டி வருகிறது

இந்நிலையில், கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவந்திருக்கும் சீனா, ஜப்பானில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஃபாபிபிராவிர் (Fabipiravir) என்ற மருந்து கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெரும்பங்கு வகிப்பதாக அறிவித்துள்ளது.

அவிகன் எனப்படும் இந்த மருந்து ஆர்.என்.ஏ வைரஸ்களை எதிர்த்துப் போராடுவதற்காக உருவாக்கப்பட்ட ஃபாவிபிராவிர் இன்ஃப்ளூயன்ஸா மருந்தின் பிராண்ட் பெயர் ஆகும் . இதை 2014 இல் பியுஜி பிலிம் டோயாமா கெமிக்கல் உருவாக்கி உள்ளது.

இந்த மருந்தால் உகானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் 340 பேர் குணமடைந்திருப்பதாக சீன அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தை சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கொரானோவால் நுரையீரல் பாதிப்பு ஏற்பட்டவர்களில் ஃபாபிபிராவிர் மருந்து கொடுக்கப்பட்ட 90 சதவீதம் பேருக்கு உடல்நலத்தில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானின் டோக்கியோவை தளமாகக் கொண்ட பியுஜி பிலிம் ஹோல்டிங்ஸ் தயாரிக்கும் மருந்து, கொரோனாவுக்கு எதிராக திறம்பட செயல்பட்டு வருவதாக சீனாவின் உயிரி தொழில்நுட்ப மேம்பாட்டு மையத்தின் இயக்குனர் ஜாங் சின்மின் செவ்வாயன்று செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

ஷென்சனில் உள்ள ஒரு மருத்துவமனையில் கொரோனா பாதிக்கபட்டவர்களுக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்டது. அதுபோல் உகான் பல்கலைக்கழகத்தின் ஜாங்னான் மருத்துவமனையில் கொரோனா பாதிக்கப்பட்ட 120 பேருக்கு இந்த மருந்து கொடுக்கப்பட்டது . இந்த மருந்து நோயாளிகளுக்கு நல்ல பலனை அளித்து உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here