அமெரிக்காவில் 22 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம்

லண்டன் –

இங்கிலாந்தில் உள்ள இம்பீரியல் கல்லூரியை சேர்ந்த கணித உயிரியல் பேராசிரியர் நீல் பெர்குசன் தலைமையிலான குழு கொரோனா வைரஸ் நோய் பற்றிய ஒரு ஆய்வை மேற்கொண்டது.

ஐரோப்பிய நாடுகளில் பெருத்த உயிர்ச் சேதத்தை சந்தித்துள்ள இத்தாலியில் இருந்து பெறப்பட்ட தரவுகள் அடிப்படையில் இந்த ஆய்வை அவர்கள் செய்துள்ளனர்.
1918ஆம் ஆண்டு முதல் உலகப் போரின்போது பரவிய ஸ்பானிஷ் புளூ காய்ச்சலுடன் கொரோனா வைரஸ் நோயை ஒப்பிட்டு உள்ளனர்.

அதன் அடிப்படையில்தான் பேராசிரியர் நீல் பெர்குசன் குழுவினர் அமெரிக்காவில் 22 லட்சம் பேரையும் இங்கிலாந்தில் 5 லட்சம் பேரையும் கொரோனா வைரஸ் பலி கொள் ளும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

இந்த குழுவில் இடம்பெற்றிருந்த தொற்று நோயியல் துறை பேராசிரியர் அஸ்ரா கனி, இது சமூகம் மற்றும் பொருளாதார ரீதியில் நமக்கு மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தும் என்று கூறி இருக்கிறார்

லண்டன் பல்கலைக்கழக கல்லூரியின் தொற்று நோயியல் துறை வல்லுனர் டிம் கால்பர்ன் இந்த ஆய்வு தகவல்கள் நாம் கடினமான காலகட்டத்தை எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது என்பதற்கான சமிக்ஞையாக அமைந்துள்ளது என்று கூறி உள்ளார்.

ஆனால் ஒன்றை குறிப்பிட்டாக வேண்டும். 1918ஆம் ஆண்டு ஸ்பானிஷ் புளூ வெடித்தபோது உலக போர் காரணமாக இந்த நோய் தகவல்கள் வெளியானால் பதற்றம் ஏற்படும் என்று பல நாடுகள் செய்திகளை வெளியிடாமல் பார்த்துக்கொண்டன.

விழிப்புணர்வு பிரச்சாரங்களும் தடுப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. ஆனால் இப்போது அப்படியல்ல. பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

எனவே இங்கிலாந்து ஆய்வு தகவல் கணிப்பு பொய்க்கும் அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் உயிரிழப்பு ஏற்படாது என்று நம்பலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here