கோலாலம்பூர்:கொரோனா வைரஸ் சீனாவிற்கு வந்தபொழுது மற்ற நாடுகள் அதனை பெரிதாக கருதவில்லை. ஆனால் ஒரு சில வாரங்களில் இதர நாடுகளுக்கு அது பரவிய போது கொரோனா கோவிட் 19 என்று அழைக்கப்பட்டது.
சீனாவை அடுத்து ஆசியா மற்றும் ஐரோப்பா நாடுகளுக்கு கோவிட் 19 வைரஸ் பரவும்போது கூட மலேசியர்களாகிய நாம் அதனை பெரிதாக கருதவில்லை.
கடந்த மாதத்தில் மலேசியர்களுக்கும் கோவிட் 19 வைரசால் பாதிக்கப்பட்டனர் என்ற தகவல் அறிந்தபோது தான் நாம் சற்று கவனம் செலுத்த ஆரம்பித்தோம்.
ஆனால் இன்று 900க்கும் மேற்பட்டவர்களுக்கு கோவிட் 19 தொற்று பரவி இருக்கிறது என்பது வேதனையான மற்றும் அதிர்ச்சியான விஷயமாக இருக்கிறது.
அரசாங்க, இதனை கட்டுபடுத்த வேண்டும் என்ற நோக்கில் நாட்டின் பிரதமர் மொகீதீன் யாசின் கடந்த 16ஆம் தேதி இரவு ஒரு சட்டத்தை அமல்படுத்தினார். அதாவது 18ஆம் தேதி மார்ச் மாதம் முதல் 31ஆம் தேதி மார்ச் மாதம் வரை நடமாடும் தடை உத்தரவு சட்டமே அதுவாகும்.
இச்சட்டத்தின் வழி அத்திவாசிய தேவைகளை தவிர்த்து மற்றவற்றிக்கு தடை ஏற்படுத்தும். நாட்டு மக்களின் தேவையை கருதி உணவகங்களின் வாடிக்கையாளர்கள் அமர்ந்து உணவருந்த முடியாது. ஆனால் வாங்கி செல்லலாம் என்ற சற்று தளர்த்தப்பட்டிருந்தது. ஆனால் சில உணவங்களில் 18ஆம் தேதி வழக்கம் போல் வாடிக்கையாளர்கள் கடைகளில் உணவருந்தி இருந்ததை கண்ட காவல்துறையினர் ஒலிபெருக்கு (மைக்) மூலம் தயவு செய்து அடையுங்கள். (தோலோங் துத்தோப் கடை) என்று கூறியபோது அவர்களிடம் ஒருசிலர் வாக்குவாதம் செய்யும் காணொலியை நம்மால் காண முடிந்தது.
இவர்களின் நிலை இவ்வாறான இருக்கும்பொழுது மற்றொரு தரப்பினர் அன்றாடம் வேலைக்கு சென்றால் தான் உணவு என்று நிலையில் சிலர் இருக்கின்றனர். அவர்களின் நிலை வேறு விதமாக இருக்கிறது. தினகூலி வேலைக்கு செல்பவர்கள் இந்த 14 நாட்கள் வேலைக்கு செல்லவில்லை என்றால் அவர்களுக்கு ஊதியம் கிடைக்காது. ஊதியம் கிடைக்காதே தவிர செலவுகள் அப்படியே தான் இருக்கும்.
இந்த கோவிட் 19 மலேசியர்களின் வாழ்வாதாரத்தை புரட்டி போட்டுள்ளது என்றால் அது மிகையாகாது.