கோலாலம்பூர், மார்ச் 21-
வெளிநாட்டிலிருந்து வருகின்றவர்களுக்கு அடைக்கலம் தரும் மனிதர்களாக இருப்பது மரியாதைக்குரிய செயலாக கருதப்பதுகிறது.
அடைக்கலம் என்பது வீட்டிற்கு அழைத்துச்சென்று ஆதரிப்பது அல்ல. அவர்கள் விருந்தினர் போல் நம்நாட்டிகு சுற்றுலாவுக்கு வருகின்றவர்கள். அவர்களுக்கு வழி காட்டிகளாக இருக்க வேண்டிய தார்மீகப் பொறுப்பு மலேசியர்களுக்கு இருக்கிறது.
அவர்களின் உடைமைகள் பறிபோகாமல் பார்த்துக் கொள்வதுமுதல் பத்திரமாகத் திரும்பிச் செல்கின்றவரை அவர்கள் நம் விருந்தாளிகளுக்குரிய தகுதியில் இருப்பவர்கள். அவர்களை ஏமாற்றுவதும் கொள்ளையடிப்பதும் படுபாதகச் செயல். இதை ஏற்கவே முடியாதது.
முகக்கவசம் வாங்குவதற்காக அணுகிய மாது 20 ஆயிரம் வெள்ளியை மலேசியரிடம் இழந்திருக்கிறார். சீனநாட்டைச் சேர்ந்த இப்பெண்மணியை ஏமாற்றிய மலேசியரான சோங் சான் வாய் என்ற 33 வயது மலேசியரான இவர், செக்க்ஷன் 420 இன் கீழ் 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை, பிரம்படி, அபராதம் விதிக்கும் குற்றத்தை எதிர்நோக்கியிருக்கிறார்.
வரும் மே மாதம் 14 ஆம்நாள் இவர் மீதான குற்றச்சாட்டு விசாரணக்கு வரும்.