மாலத்தீவு அதிபருக்கு புத்ராஜெயாவில் அதிகாரப்பூர்வ வரவேற்பு

புத்ராஜெயா:

லேசியா வந்தடைந்த மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமட் முய்சுவிற்கு இன்று பெர்டானா புத்ரா வளாகத்தில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று காலை 9.00 மணிக்கு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவரை வரவேற்றார்.

BERNAMApix

அவருடன் துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அமாட் ஜாஹிட் ஹமிடி, பாதுகாப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் காலித் நோர்டின் மற்றும் உயர்கல்வி அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சாம்ப்ரி அப்துல் காதிர் ஆகியோரும் உடனிருந்தனர்.

நான்கு நாள் பயணமாக மலேசியா வந்துள்ள முய்சு, பின்னர் மூன்று அதிகாரிகள் மற்றும் ராயல் மலாய் படைப்பிரிவின் முதல் பட்டாலியனின் 102 உறுப்பினர்களால் வழங்கப்பட்ட மரியாதை அணிவகுப்பைப் பார்வையிட்டார்.

நவம்பர் 17, 2023 அன்று பதவியேற்ற பிறகு, மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமட் முய்சு மலேசியாவிற்கு மேற்கொண்ட முதல் அதிகாரப்பூர்வ பயணம் இதுவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here