தடைகளை மீறுவோர் தாக்கபடுவர்களா? அபத்தம் வேண்டாம்

பெட்டாலிங் ஜெயா, மார்ச் 23-

நாட்டின் இக்கட்டான நிலைமை சீர்பெறவேண்டி அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது, தொடர்ந்து தேவைக்கேற்ப மாற்றங்களைச் செய்தும் வருகிறது.
மாற்றங்களில் ஏமாற்றமே வெளிப்படையாக இருப்பதால் ராணுவத்தினர் களப்பணி ஆற்றும் உத்தரவை அரசு பிறப்பித்திருக்கிறது.

உள்ளபடியே ராணுவத்தினர்களுக்கு ஒத்துழைப்பாய் இருக்க வேண்டிய பொறுப்பு மக்களைச் சார்ந்திருக்கவேண்டும். ஆனால் கொரோனா 19 ஐப்போல் பழிவாங்கக்கூடாது என்று சமூகச் சிந்தனையாளர்கள் கூறுகின்றனர்.

ராணுவத்தினர் பொதுமக்களைத் தாக்குவார்கள் என்ற வாட்ஸ் அப் செய்தியை பரப்பி ராணுவத்தினரை அவமதித்திருப்பதாக பலர் எரிச்சலடைந்திருக்கின்றனர்.

மக்களுக்கு நன்மை செய்யவே ராணுவம் அமர்த்தப்படுகிறது. அதைக் கொச்சைப்படுத்துவது நியாயமல்ல. இது பொய்யான வதந்தி என்று ராணுவப் படைத்தலைவர் அஃபெண்டி புவாங் தெரிவித்துள்ளார்.

சிலரின் குற்றச்சாட்டுகள் அபாண்டமானவை. போலீஸ் துறைக்கு உதவும் பொருட்டே ராணுவம் களம் இறக்கப்படுகிறது என்றால் மக்கள் எல்லை மீறுகின்றனர் என்பது தெளிவாகிறது.

மக்கள் எல்லை மீறும்போது தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறது. ஆனாலும் காரணங்கள் நியாயமாக இருக்கும்போது சம்மன்கள் வழங்கப்படுவதில்லை.

ஒத்துழைக்காவிட்டாலும் உபத்திரம் தராமல் இருந்தால் கடமையில் முழுக்கவனம் செலுத்த முடியும். ராணுவத்தினர் மக்களுக்காக இருக்கின்றனர்.

அமைதிதான் அவர்களின் குறிக்கோள். மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். பொதுமக்களைத் தாக்க வேண்டிய அவசியமே ராணுவத்தினர்களுக்கு இல்லை.

எல்லை தாண்டாமல் மக்களும் ஒத்துழைக்கவேண்டும் என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here