கெப்போங், தித்திவங்சா. செராஸ், லெம்பா பந்தாய் சிவப்பு மண்டலம்
கோலாலம்பூர் –
மலேசியாவில் கொரோனாவினால் ஏற்படும் மரண எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதே சமயம் உலகளவில் 13, 240 பேர் இந்த கிருமிக்கு பலியாகி விட்டனர்.
இந்த நிலையில் கூட்டரசுப் பிரதேசத்தில் உள்ள லெம்பா பந்தாய், தித்திவங்சா, கெப்போங், செராஸ் ஆகிய நான்கு இடங்களும் வைரஸ் அபாய பகுதிகளாக மாறி விட்டன என்று கூட்டரசுப் பிரதேச அமைச்சர் டான்ஸ்ரீ அனுவார் மூசா தெரிவித்தார்.
அதேவேளையில் மலேசியா முழுவதும் 95 பகுதிகளில் கொரோனா (கோவிட் – 19) பரவியுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியது. இது தொடர்பான புள்ளி விவரத்தை சுகாதாரத் தலைமை இயக்குநர் டத்தோ டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா வெளியிட்டார்.