திரிஷாவுக்கு பதில் காஜல்…

திரிஷா விலகிய தெலுங்கு படத்தில் அவருக்கு பதிலாக தன்னை ஒப்பந்தம் செய்து இருப்பதை காஜல் அகர்வால் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.

திரிஷா தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி கதாநாயகியாக இருக்கிறார். இந்தி, மலையாள படங்களிலும் நடித்துள்ளார். சமீபத்தில் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா என்ற தெலுங்கு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க திரிஷாவை ஒப்பந்தம் செய்து இருந்தனர்.

இந்தப் படத்தை கொரட்டல்லா சிவா இயக்குகிறார். 5 வருடங்களுக்கு பிறகு திரிஷா நடிக்க இருந்த தெலுங்கு படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. படப்பிடிப்பை தொடங்க தயாரான நிலையில் திரிஷா திடீரென்று ஆச்சார்யா படத்தில் இருந்து விலகுவதாக அறிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here