துப்பாக்கி சூட்டுக் காயத்துடன் துணை போலீஸ்காரரின் சடலம் ;போலீஸ் விசாரணை ஆரம்பம்

கோத்தா கினாபாலு:

கோத்தா கினாபாலு அனைத்துலக விமான நிலையத்தின் ஓய்வு எடுக்கும் பகுதியில், ஒரு துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் துணை போலீஸ்காரர் ஒருவர் இறந்தது கிடக்க கண்டெடுக்கப்பட்டது தொடர்பில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

42 வயதான பாதிக்கப்பட்ட நபர், காலை 9.30 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டதாக மாநில குற்றப் புலனாய்வுத் துறை தலைவர் எஸ்ஏசி அஸ்மி அப்துல் ரஹீம் தெரிவித்தார்.

சம்பவ இடத்திற்கு வந்த குயின் எலிசபெத் மருத்துவமனை 1-ன் மருத்துவக் குழு காலை 10 மணியளவில் வந்து அவர் இறந்துவிட்டதாக உறுதிப்படுத்தியது.

இந்த வழக்கை திடீர் மரணம் என போலீசார் வகைப்படுத்தியுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் போலீசார் முன்னெடுத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here