உலகளாவிய நிலையில் கோவிட் 19 வைரசால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் நம் நாட்டிலும் கடந்த 18ஆம் தேதி மார்ச் தொடங்கி ஏப்ரல் 14ஆம் தேதி வரை மக்கள் நடமாட்ட தடை அமலில் இருக்கிறது.
அனைவரும் மக்கள் நடமாட்ட ஆணையை பின்பற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சேவை என்ற அடிப்படையில் மலேசிய இந்து சங்கம் இயங்கி வருகிறது.
கூட்டரசு பிரதேசம் (விலாயா) மாநிலத்தின் 38ஆவது ஆண்டுக்கூட்டம் வரும் 5.4.2020 பெட்டாலிங் எஸ்டேட் ஶ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் திட்டமிட்டப்பட்டிருந்தது.
தற்பொழுது நாடு எதிர்நோக்கியிருக்கும் சிக்கலான சூழலை கவனத்தில் கொண்டு ஆண்டு கூட்டம் மறுதிகதி அறிவிக்கும் வரை ஒத்தி வைக்கப்படுவதாக விலாயா மாநிலத் தலைவர் மாணிக்கவாசகம் கதிரேசன் கூறினார்.
அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கு இணங்கி அனைவரும் பாதுகாப்பாக வீட்டிலேயே இருக்குமாறும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.