சிறப்பு வாகனப் பதிவு எண் M1M – RM622,000 க்கு ஏலம் -JPJ

கோலாலம்பூர்:

நாட்டின் 66வது தேசிய தின கொண்டாட்டத்துடன் இணைந்து வெளியாக்கப்பட்ட ‘M__M’ சிறப்பு வாகனப் பதிவு எண் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த M__M’ சிறப்பு வாகனப் பதிவு எண்ணை ஏலம் எடுத்ததன் மூலம் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) 20 மில்லியன் ரிங்கிட் வசூலித்துள்ளதாக அது இன்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இதில் M1M வாகனப் பதிவு எண் RM622,000 ஆக மிக அதிகமான விலையில் ஏலம் போனது. அதனைத்தொடர்ந்து M5M பதிவு எண்- RM500,000 க்கும், M8M பதிவு எண் – RM450,000க்கும் M9M பதிவு எண்- RM402,004க்கும் மற்றும் M6M பதிவு எண் RM350,000க்கும் முறையே இரண்டாவது முதல் ஐந்தாவது இடங்களில் உள்ளன.

இந்த M__M தொடர் ஏலத்தில் மொத்தம் 25,033 நபர்கள் பங்கேற்றபோதிலும், மொத்தம், 6,872நபர்களே அந்த ஏலத்தில் வெற்றி பெற்றனர், ”என்று JPJ மேலும் கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here