புத்ராஜெயா:
ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் மக்கள் நடமாட்ட கட்டுப்பாட்டு ஆணையின் (எம்.சி.ஓ) இரண்டாம் கட்டத்தின் போது உணவகங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளுக்கான வணிக நேரம் மிகவும் கட்டுப்படுத்தப்படும்.
இந்த வணிக நிறுவனங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும் என்று பாதுகாப்பு அமைச்சர் டத்தோஶ்ரீ இஸ்மாயில் சப்ரி யாகோப் தெரிவித்தார். MCO இன் இரண்டாம் கட்டத்தின் போது உணவு விநியோக சேவைகளும் அதே வணிக நேரங்களில் மட்டுமே இயங்க முடியும்.
ஏப்ரல் 1 ஆம் தேதி தொடங்கும் MCO இன் இரண்டாம் கட்டத்தின் போது, அரசாங்கம் கட்டுப்பாடுகளை அதிகரிக்கும். தற்போது, சில பல்பொருள் அங்காடிகள் நள்ளிரவு வரை செயல்படுவதைக் காண்கிறோம். எனவே, இன்றைய கூட்டத்தில் பல்பொருள் அங்காடிகள் மற்றும் உணவகங்கள் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே இயங்க முடியும் என்று முடிவு செய்துள்ளோம்.
உணவுகளை வாங்கிச் செல்லும் சேவைகளுக்கு கட்டுப்படுத்தப்படும். பெட்ரோல் நிலையங்கள் மற்றும் உணவு விநியோக சேவைகளுக்கும் இது பொருந்தும். காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை இயக்க நேரத்தை நாங்கள் அறிவிக்க இருக்கிறோம் என்று திங்கள்கிழமை (மார்ச் 30) தினசரி கோவிட் 19 பற்றிய செய்திகளை தெரிவிக்கும் செய்தியாளர் கூட்டத்தில் இஸ்மாயில் சப்ரி கூறினார்.
உணவு விநியோகஸ்தர்கள் உணவினை வாடிக்கையாளர்களின் வீட்டிற்கு வெளியிலேயே வழங்குடுமாறு என்று இஸ்மாயில் சப்ரி வலியுறுத்தினார். இது வாடிக்கையாளர்களும் விநியோகஸ்தர்களுமான தூரத்தை அதிகப்படுத்த உதவும் என்றார்.
வைரஸ் பரவுவதற்கான வாய்ப்புகளை குறைக்க, மற்றவர்களுடன் தொடர்பைத் தவிர்க்க நாங்கள் முயற்சிக்க வேண்டும், என்று அவர் கூறினார். பொது போக்குவரத்தைப் பொறுத்தவரை, MCO இன் இரண்டாம் கட்டத்தில் காலை 6 முதல் 10 மணி வரை மற்றும் மாலை 5 மணி முதல் 10 மணி வரை ஒரே மாதிரியாக இருக்கும். டாக்சிகள் மற்றும் இ-ஹெயிலிங் சேவைகள் காலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை இடைவிடாது இயங்க முடியும்.