தடையுத்தரவு காலத்திலும் கும்மாளமா?

புத்ராஜெயா –

தடையுத்தரவு அமலில் இருக்கும் காலகட்டத்திலும் விருந்துபசரிப்பில் கலந்துகொண்டு கும்மாளம் போட்டவர்கள் உட்பட நேற்று ஒரே நாளில் 649 பேர் கைது செய்யப்பட்டனர்.

பொதுமக்கள் நடமாட்டத்திற்குக் கட்டுப்பாடு விதிக்கும் தடையுத்தரவு ஏப்ரல் 14ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் இந்தத் தடையுத்தரவை மீறியதற்காக நேற்று ஒரே நாளில் மட்டும் 649 பேர் பிடிபட்டனர் என்று தற்காப்பு அமைச்சர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் தெரிவித்தார்.

பினாங்கிலுள்ள ரெலாவ் மார்க்கெட்டில் தடையை மீறி நுழைந்தனர் என்பதற்காக 150 பேர் பிடிபட்டனர். அந்த மார்க்கெட்டும் காலவரையரையின்றி மூடப்பட்டது.

அதேவேளையில் ஜோகூர் பாரு, ஜாலான் தஞ்சோங் புத்ரி எனுமிடத்தில் ஒரு வீட்டில் நடந்த விருந்துபசரிப்பில் கலந்துகொண்ட 30 பேரும் கைதுசெய்யப்பட்டனர்.

அவர்கள் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது சோதனையில் தெரியவந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here