உணவின்றி தவிப்பவர்களுக்கு உதவும் பிரணிதா

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க நடக்கும் ஊரடங்கால் மக்களின் அன்றாட வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பலர் உணவுக்கு கஷ்டப்படுகின்றனர். ஆயிரக்கணக்கான வடமாநில தொழிலாளர்கள் நடந்தே ஊருக்கு செல்லும் நிலை இருக்கிறது. வழியில் சாப்பாடு கிடைக்காமல் பட்டினியாக இருக்கின்றனர். இவர்களுக்காவும், வருமானம் இன்றி தவிக்கும் ஏழைகளுக்காகவும் தமிழில் சகுனி, மாஸ் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள பிரணிதா தனது அறக்கட்டளை மூலம் உதவ முன்வந்துள்ளார்.

இதற்காக நிதி திரட்டும் முயற்சியில் இறங்கி இருக்கிறார். 40 சதவீதம் நிதியை அறக்கட்டளை மூலம் திரட்டிவிட்டார். மீதித்தொகையையும் திரட்டும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். இந்த தொகையை வைத்து கஷ்டப்படுவோருக்கு உணவும், உதவி பொருட்களும் வழங்க இருப்பதாக அறிவித்துள்ளார். பிரணிதாவின் செயலை சமூக வலைத்தளத்தில் பலரும் பாராட்டி வருகிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here