கொரோனாவால் நெதர்லாந்தில் புகழ்பெற்ற ஓவியம் திருட்டு

நெதர்லாந்தில் கொரோனாவால் பூட்டப்பட்டிருந்த அருங்காட்சியகத்தில் இருந்து புகழ்பெற்ற ஓவியம் திருடப்பட்டுள்ளது.

ஆம்ஸ்டர்டாம்ஏப்ரல் 1-

நெதர்லாந்தை சேர்ந்த புகழ்பெற்ற ஓவியர் வின்சென்ட் வான்கோ. இவர் கடந்த 1984-ம் ஆண்டு வசந்தகால தோட்டம் என்ற பெயரில் வரைந்த ஓவியம் உலக அளவில் புகழ் பெற்றதாகும்.

 

இந்த ஓவியம் தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் உள்ள சிங்கர் லாரன் அருங்காட்சியகத்தில் பாதுகாக்கப்பட்டு வந்தது.

 

இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக இந்த அருங்காட்சியகம் கடந்த 12-ந்தேதி முதல் மூடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் இரவு முகமூடி கொள்ளையர்கள் சிலர் அருங்காட்சியகத்தின் ஜன்னல் கண்ணாடியை உடைத்து உள்ளே நுழைந்தனர்.

 

அவர்கள் வின்சென்ட் வான்கோவின் வசந்தகால தோட்டம் ஓவியம் உள்பட பல அரிய பொக்கிஷங்களை திருடிச் சென்றுவிட்டனர். போலீசார் அவர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here